ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது - என்னென்ன சிறப்பம்சங்கள்
பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிசாட் 1 செயற்கைக்கோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை அதிவேகத்தில் அது அனுப்பும், வேளாண்மை, வனம், சுரங்கம், வானிலை, கடல் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ராக்கெட்டை சுமந்து செல்கிறது. இந்த ஜிசாட்-1 செயற்கைகோளில் அதிநவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க இந்த கேமராக்கள் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டிருந்ததால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகள் அனுப்புவதில் பல சிரமங்களை சந்தித்த இஸ்ரோ பற்பல புதிய முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து பூமியின் வளம் சார்ந்த கூறுகளை அறிவதற்காக ஜிசாட்-1 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் அதிநவீன கேமரா இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் கடும் மேக மூட்டமாக இருந்தாலும் மழைப் பொழிவின் போதும் துல்லியமான படத்தை எடுத்துத்தரும் ஆற்றல் இந்த கேமராவிற்கு உண்டு. இதன் காரணமாக பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை அதிவேகத்தில் அது அனுப்பும், வேளாண்மை, வனம், சுரங்கம், வானிலை, கடல் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள் முதலில் கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 3.43 மணிக்கு தொடங்கியது. 2 ஆயிரத்து 268 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக்கோள் முதன்முறையாக இஸ்ரோவால் ogive வடிவத்தில் 4 மீட்டர் சுற்றளவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட், புவி ஒத்திசைவுக்கு ஏற்ற செயற்கைக் கோளை சுமந்து செல்லும் 14 ஆவது ராக்கெட்டாகும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications