For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட்!

Google Oneindia Tamil News

ஶ்ரீஹரிகோட்டா: அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தும் 75-வது ராக்கெட்..

ISRO launches RISAT 2BR1 satellite byPSLVC- 48

பி.எஸ்.எல்.வி.சி-ன் 50-வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இஸ்ரோவின் ரிசார்ட்-2 பிஆர்-1 மற்றும் 9 வர்த்தக செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தது. இன்று பகல் 3.25 மணிக்கு விண்ணில் இது செலுத்தப்பட்டது.

இஸ்ரோவின் ரிசார்ட்-2 பிஆர்-1 என்பது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். பூமியில் இருந்து 576-வது கி.மீட்டரில் இந்த செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி

இதன் பின்னர் விஞ்ஞானிகளிடையே பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிஎஸ்எல்விசி ராக்கெட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பணியாற்றிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலம் இந்தியாவின் ரிசாட் 2பி.ஆர்.1 செயற்கைக் கோளையும், அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் 9 சிறிய செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பி.எஸ்.எல்.வி வகை ஏவுகலத்தின் 50-ஆவது விண்வெளி பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.

பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலத்தின் இன்றைய சாதனைப் பயணம் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 75 ஆவது பயணம் ஆகும். இத்தகைய சாதனைகளுக்கு காரணமான இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும்!

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

English summary
ISRO today launcheed RISAT 2BR1 satellite byPSLVC- 48 from Sriharikota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X