For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலவின் பின்பக்கத்தில் அணு சக்தி.. ரோவர் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ.. மாஸ் திட்டம்!

நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நிலவின் பின்பக்கத்தில் அணு சக்தி, இஸ்ரோ...மாஸ் திட்டம்!- வீடியோ

    டெல்லி: நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது.

    சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத காரணத்தால் நிலவின் பின்பக்கம் முழுக்க முழுக்க இருளாக இருக்கும். இந்த இருளான பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.

    இதன் பின்பக்கத்தில் மிகவும் அதிக அளவில் மின்சார சக்தி அளிக்கும் பொருட்கள் உள்ளது. இப்போது இஸ்ரோ, ஸ்பேஸ் எக்ஸ், நாசா என எல்லோரும் நிலவின் இந்த பகுதியைதான் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

    இரண்டு நாடுகள்

    இரண்டு நாடுகள்

    சீனா நிலவின் பின் பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதுவரை நிலவின் முன்பக்கத்தை மட்டுமே நாம் ஆராய்ச்சி செய்துள்ளோம். ஆனால் சீனாவின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்தியாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலவின் பின்பக்கத்திற்கு 2020ல் இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப இருக்கிறது. இது நிலவின் பின்பக்கத்தை ஆராயும்.

    ஏன் இந்த ஆராய்ச்சி

    ஏன் இந்த ஆராய்ச்சி

    நிலவின் பின்பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக கிடைக்கிறது. இதன் மூலம் கொஞ்சம் கூட மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் உலகில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல், எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும். இந்த மின்சார சக்தியை யார் எடுப்பது என்பதுதான் நிலவின் பின்பகுதியை ஆராய மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

     முதல் நாடு

    முதல் நாடு

    இதற்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும் முயற்சி செய்கிறது. ஆனால், இதில் இந்தியாதான் தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. இதன் மூலம், நிலவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். அதேபோல் மற்ற நாடுகளுக்கு தலைமை ஏற்கவும் முடியும். இது இந்தியாவை சர்வதேச அளவில் பெரிய வல்லரசாக மாற்றும்.

    எப்போது நடக்கும்

    எப்போது நடக்கும்

    2020ல் இந்தியா இந்த ரோவரை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனா 2022ல் தான் இந்த ஆராய்ச்சியை செய்ய இருக்கிறது. இதனால் இந்தியாவின், இந்த ஆராய்ச்சி மற்ற நாடுகளை வாய் பிளக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதற்காக 2020க்கு பின் நிலவிற்கு மனிதர்கள் அனுப்பப்படவும் வாய்ப்புள்ளது.

    English summary
    ISRO plan to a send a rover to research back side of the Moon to create electricity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X