Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை செயற்கைக்கோள்கள் உடன் வெற்றிகரமாக.. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்! சாதித்த இஸ்ரோ

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: நேற்று மாலை விண்ணில் ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை 4.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்த இரட்டை செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆராய்வதற்காக ப்ரோபா-3, 'கரோனா கிராப்' எனும் இரட்டை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ISRO Rocket satellite

'புரோபா-3' 'கரோனா கிராப்' செயற்கைக் கோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவப்படுவதற்காக எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.08 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று கடைசி நேரத்தில் மாலை 3 மணிக்கு மேல் திடீரென ராக்கெட் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ.

பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு (அதாவது இன்றைக்கு) ஒத்திவைக்கப்படுவதாகவும், புரோபா 3 செயற்கைக் கோளில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் திட்டத்தை ஒத்திவைப்பதாகவும் இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், இன்று மாலை 4.12 மணியளவில் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி59 ராக்கெட். இந்த ராக்கெட், 'புரோபா-3' 'கரோனா கிராப்' ஆகிய 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும்.

2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+