சீறிப் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சிம்எஸ்எஸ் - 3 செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்டதில் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இதுதான். இது பாகுபலி என செல்லமாக அழைக்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வரிசையில், ஜிசாட் -7 ஆர் என்று அழைக்கப்படும் 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ் 03 என்ற கடற்படைக்கு தேவையான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் இதுவரை ஏவப்பட்டதில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவகு ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டுள்ளது. இதற்காக LVM3-M5 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏவப்படும் CMS-03 செயற்கைக்கோளானது 4,410 கிலோ எடை கொண்டது. இவ்வளவு எடையை கொண்டதால் இதனை "பாகுபலி" என்று வர்ணிக்கின்றனர்.
முன்னதாக பிரான்ஸ் நாட்டின் கயானாவில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அரியானே 5 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-11 என்ற பிரம்மாண்ட செயற்கைக்கோள் இஸ்ரோ மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 5,854 கிலோ. அதன்பிறகு தற்போது இந்திய மண்ணில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இன்று ஏவப்பட்டுள்ள பாகுபலி ராக்கெட்டின் நீளம் 43.5 மீட்டர்.
ராக்கெட் ஏவுவதற்கான் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. LVM3-M5 ராக்கெட்டை பொறுத்தவரை மூன்று படிநிலைகளை கொண்டது. S200 என்ற இரண்டு சாலிட் மோட்டார் ஸ்ட்ராப்-ஆன்ஸ், L110 என்ற திரவ புரோபல்லண்ட் கோர் ஸ்டெஜ், C25 என்ற கிரையோஜெனிக் ஸ்டேஜ் ஆகியவை ஆகும்.
இவை மூன்றும் சேர்ந்து அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவ உதவிகரமாக இருக்கின்றன. அதிக சக்தி வாய்ந்த கிரையோஜெனிக் ஸ்டேஜ் மூலம் GTOவில் 4,000 கிலோ எடையையும், புவியின் தாழ் வட்டப் பாதையில் 8,000 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட்டானது GSLV MkIII என்ற வகையை சேர்ந்தது.
அதாவது, செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவுதல், நிலையான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது போன்ற விஷயங்களை கச்சிதமாக செய்யக்கூடியது. இந்த ராக்கெட் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. முதன்முதலில் 2014ஆம் ஆண்டு டிசம்பரில் LVM-3 ஆபரேஷனல் ஃபிளைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாகவே அமைந்துள்ள நிலையில், இன்றைய தினம் 5வது மிஷன் ஏவப்பட்டுள்ளது.
ஏவுகணையில் இருந்து CMS-03 வெற்றிகரமாக பிரிந்தது. மிஷன் வெற்றி அடைந்துளது. "ஹைகம்யூனிகேஷன் செயற்கைக்கோள் CMS-03 பிரிந்துள்ளது, இது வெற்றிகரமான ஏவுதலைக் குறிக்கிறது. செயற்கைக்கோள் அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது" என்று SSLV ஏவுதள வளாகத்தின் துணை திட்ட இயக்குநர் பி. மாதுரி கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications