• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: சென்னையில் 23 இடங்களில் வருமான வரி சோதனை

By Mathi
|

சென்னை: சென்னையில் காந்தி பேப்ரிக்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உட்பட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:

Newest First Oldest First
8:01 PM, 8 Jun
நீட்டால் மட்டும்தான் மாணவர்கள் இறந்தார்களா என்பது கேள்விக்குறி- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாணவர்களை பயிற்றுவிக்க போதிய வசதிகள் இருக்கிறதா?

துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன்: நிர்மலா சீதாராமன்

5:49 PM, 8 Jun
எஸ்.வி.சேகரை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் - தமிழிசை
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் - தமிழிசை
ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியை சீர்குலைக்கும் - தமிழிசை
எஸ்.வி.சேகரை போலீஸார் ஒரு மாதமாக வலை வீசி தேடி வருகிறார்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருக்கிறார்
5:48 PM, 8 Jun
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடமாற்றம்
துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம்
5:29 PM, 8 Jun
தாம்பரம்-நெல்லை இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் சேவை துவக்கி வைப்பு
அந்த்யோதயா ரயிலில் தாம்பரம்-நெல்லை பயணக்கட்டணம் ரூ.240
ரயில் பெட்டிகளில் எல்.இ.டி விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்யும் வசதிகள்
அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைப்பு
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விழாவில் பங்கேற்பு
5:02 PM, 8 Jun
சென்னை ஐடி ரெய்டில் ரூ 7.5 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
5:01 PM, 8 Jun
பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

ஜமீன்முத்தூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயம்

கட்டிடத்தில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரம்

3:37 PM, 8 Jun
மருத்துவ படிப்புக்கு ஆண்டுக்கு ரூ13 லட்சம் கல்வி கட்டணம்

ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

3:25 PM, 8 Jun
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களுக்கு 1500 மிமீ மழை பெய்யலாம்

வால்பாறை, நீலகிரியில் வரும் 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை- வெதர்மேன்

3:24 PM, 8 Jun
மும்பையில் வரும் நாட்களில் மழை தீவிரமடையும்- வெதர்மேன் பிரதீப்ஜான்

கர்நாடகாவின் மங்களூருவில் அதிகமான மிக கனமழை இருக்கும்

கோவாவில் மழை மிகக் கடுமையாக இருக்கும்

1:54 PM, 8 Jun
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் ஓரிரு முறை லேசான மழை பெய்யும் - வானிலை மையம்

1:53 PM, 8 Jun
பிரதமர் மோடியை படுகொலை செய்ய சதித் திட்டம்
புனே நீதிமன்றத்தில் போலீசார் திடுக் தகவல்
ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது போல மோடியை கொல்ல சதி
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித் திட்டம்- புனே போலீஸ்
பிராமணர்களை வீழ்த்திய கோரேகான் போர் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு என 5 பேர் கைது
5 பேரை கஸ்டடியில் எடுக்க கோரி புனே நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்
200 ஆண்டுகளுக்கு முன் கோரேகானில் பிராமணர் படையை வீழ்த்தியது தலித்
கோரேகான் வெற்றியின் 200-வது ஆண்டு விழா ஜனவரி 1ல் நடந்தது
கோரேகான் வெற்றி விழாவின் போது பெரும் வன்முறை வெடித்தது
1:15 PM, 8 Jun
நீட் மரணம் - ஹைகோர்ட்டில் முறையீடு
நீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
நீட் தேர்வால் தமிழகத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முறையீடு
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
1:15 PM, 8 Jun
ஸ்டெர்லைட் கண்டிப்பாக திறக்கப்படாது - ஆலை மக்கள் தொடர்புதுறை தலைவர்
ஆலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை
ஸ்டெர்லைட் ஆலை மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி
12:55 PM, 8 Jun
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

காதலன் கைது செய்யப்பட்டதால் சங்கீதா என்பவர் தற்கொலை முயற்சி

பிளேடால் சங்கீதா கையை அறுத்துக் கொண்ட விபரீதத்தால் பரபரப்பு

12:20 PM, 8 Jun
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 கைதிகளுக்கு ஜாமீன் ரத்து

13 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது நாமக்கல் மாவட்ட நீதிமன்றம்

ஜாமீன் ரத்தானதால் சேலம் சிறையில் 13 கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

12:13 PM, 8 Jun
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவல் நீட்டிப்பு

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் கடந்த 26 ஆம் தேதி வேல்முருகன் கைது

வேல்முருகன் காவலை ஜூன் 22வரை நீட்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

11:43 AM, 8 Jun
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு இல்லை- முதல்வர்

ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை

சட்டசபையில் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

குறுவை சாகுபடிக்கான புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி

11:22 AM, 8 Jun
ஜாலியன் வாலாபாக் போன்ற துப்பாக்கிச் சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம், பசீர் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

அமமுகவின் தாமஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

9:22 AM, 8 Jun
கண்டமங்கலத்தில் மாணவி அஷ்டலட்சுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாணவி அஷ்டலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
9:22 AM, 8 Jun
நீட் தேர்வு: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி
9:22 AM, 8 Jun
சென்னையில் 23 இடங்களில் வருமான வரி சோதனை

காந்தி பேப்ரிக்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து அதிகாரிகள் ரெய்டு

9:21 AM, 8 Jun
ஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழப்பு- தமிழக அரசு ஷாக் தகவல்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Income Tax Department raids at around 23 locations in Chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more