பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கொட்டித் தீர்த்த கோடை மழை
பெங்களூர்: பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கோடை மழை பெய்து மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.
பெங்களூர் என்றால் குளு குளு என்று இருக்கும் என்ற காலம் வேகமாக மலையேறி வருகிறது. பிப்ரவரி மாதம் துவங்கியதில் இருந்தே பெங்களூரில் வெயில் மண்டையை பிளக்கிறது. மார்ச்சிலேயே கண்ணை கட்டுதே இன்னும் ஏப்ரல், மாதம் வேறு இருக்கிறதே பேசாமல் சென்னைக்கு சென்றுவிடலாமா என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு வெயில் சுள்ளென்று அடிக்கிறது.

இந்நிலையில் பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான ராமமூர்த்தி நகர், நெலமங்களா, கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, பானஸ்வாடி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் பெல்லந்தூர், ஜெயா நகர், பன்னர்கட்டா ரோடு, திலக் நகர், எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது. ஆனால் சில்லென்ற காற்று மட்டும் தொடர்ந்து வீசுகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications