ரூ1,000 கோடி நில மோசடி புகார்: லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ஐடி ரெய்டு...பரபர பீகார் அரசியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: ரூ1,000 கோடி நில மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள், டெல்லி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவகின்றனர்.

IT raids Lalu Prasad Yadav kin’s residences in Rs. 1000 crore benami land deals case

அதே நேரத்தில் முன்னாள் பீகார் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தனது பினாமி பெயர்களில் வாங்கியதாக கூறப்படும் டெல்லி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்னாவில் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுசில்குமார் மோடி, மும்பையில் செயல்படுவதாகக் கூறப்படும் ஏ.பி. ஏற்றுமதி நிறுவனத்தை பினாமி பெயரில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.115 கோடி மதிப்பிலான சொத்து டெல்லியில் இருக்கிறது. ஆவணங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது." என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதன் பின்னணியில் இந்த ரெய்டு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The I-T department conducted raids and surveys at 22 locations in Delhi, Gurugram on the charges of Benami land deals worth Rs 1000 crore, involving Lalu Prasad Yadav.
Please Wait while comments are loading...