Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி என்பது போல இருக்கிறது.. பாஜகவை அட்டாக் செய்த ஆம் ஆத்மி!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் விலகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அக்கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் நிறுத்தப்படலாம் என்று பாஜக கூறியிருப்பது குஜராத் அரசியலில் கடும் விவாதப்பொருளாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, இது பாஜக பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி என்பது போல இருக்கிறது என்று பதிலளித்துள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

குஜராத் பக்கம் திரும்பிய ஆம் ஆத்மி

குஜராத் பக்கம் திரும்பிய ஆம் ஆத்மி

அந்த மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் ஆசிட் டெஸ்ட் ஆகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அரசியல் இப்படி பரபரத்து கொண்டிருக்க பஞ்சாபில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் குஜராத் பக்கமும் ஆம் ஆத்மி கட்சி தன் கவனத்தை திருப்பியுள்ளது.

ஏராளமான வாக்குறுதிகள்

ஏராளமான வாக்குறுதிகள்

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீப வாரமாகவே குஜராத் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தால் தரமான இலவச கல்வி, இலவச மின்சாரம் என வாக்குறுதிகளை வீசி வருகிறார். இதனால், ஆளும் பாஜகவுக்கு ஆம் ஆத்மியும் கடும் சவால் அளிக்கும் என்றே தெரிகிறது. இதனால், குஜராத் பாஜக தலைவர்கள் ஆம் ஆத்மியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரக..

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரக..

இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக விலகிய பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கரை ஆம் ஆத்மி குஜராத் முதல்வர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக பாஜக அவரை சீண்டியுள்ளது. குஜராத்தில் சர்தார் சரோவர் அணை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வரும் மேதா பட்கர் தான் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளாரக முன்னிறுத்தப்பட இருப்பதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்பட பாஜக தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

சோனியா காந்தி பாஜகவின் பிரதமர் வேட்பாளர்...

சோனியா காந்தி பாஜகவின் பிரதமர் வேட்பாளர்...

பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூட இவ்வாறு கூறியிருந்தார். பாஜகவின் இந்த விமர்சனங்கள் குஜராத் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் நிலையில், மேதா பட்கர் முதல்வர் வேட்பாளாரா? என்பதற்கு ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கூறுகையில், ''மேதா பட்கரை முதல்வர் வேட்பாளாராக பாஜக முன்னிறுத்தும் எனக்கூறுவது சோனியா காந்தியை பாஜக தனது பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்துவது என சொல்வதற்கு ஒப்பானது'' என்று கூறியுள்ளது.

 ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக

ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சி பாஜக இது போன்ற வதந்திகளை பரப்புவதாகவும் கூறியுள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வட கிழக்கு மும்பை தொகுதியில் மேதா பட்கர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக மேதா பட்கர் அறிவித்தார்.

 நான் அரசியலில் இல்லை

நான் அரசியலில் இல்லை

தற்போது நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பையும் நடத்தி வரும் மேதா பட்கர், பாஜகவின் இந்த விமர்சனத்திற்கு கடந்த 30 ஆம் தேதியே முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் பதில் கொடுத்தார். மேதா பட்கர் இது குறித்து கூறுகையில், ''ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நான் 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த சில மாதங்களில் விலகிவிட்டேன். தற்போது நான் அரசியலில் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் முடிவை பாஜவினர் எப்படி அறிந்தனர்.. தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன'' எனக்கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+