ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளம்.. 65 பேர் பலி! காணாமல் போன 50 பேரை தேடும் பணிகள் தீவிரம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் சசோட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சசோட்டி என்பது, மச்சைல் மாதா கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த பகுதியில் கடந்த வியாழன் கிழமை மதியம் 12.25 மணிக்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர்.

வெள்ளத்தில் சிக்கயவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், 2 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 46 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உறவினர்கள் 69 பேர் காணாமல் போயிருந்தனர். மச்செய்ல் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித பயணத்தை மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின்போதுதான் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கிஸ்ட்வார் நகரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிசோட்டியில் இருந்து 9,500 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு 8.5 கி.மீ. பயணம் தொடங்குகிறது. மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது இந்த புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அதில், வீடுகள் அடித்துச் செல்லப்படுவது தெரிகிறது.
உத்தர்காஷியின் தாராலி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு மீண்டும் இமயமலையில் இப்படி ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது சோகத்தை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய வானிலை மையத்தின் ஆய்வின்படி, 2010 முதல் 2022 வரை ஜம்மு காஷ்மீரில் 2,863 தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 552 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. IMD விஞ்ஞானிகளான முக்தார் அகமது, சோனம் லோட்டஸ், ஃபாரூக் அஹ்மத் பட், அமீர் ஹசன் கிச்லூ, மற்றும் சிவிந்தர் சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தைச் சேர்ந்த பப்பா தாஸ் ஆகியோரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த 12 ஆண்டு காலத்தில், இடி மின்னல் மற்றும் கனமழை அடிக்கடி நிகழ்ந்துள்ளன. 1,942 முறை இடி மின்னல் ஏற்பட்டது. 64.5-115.5 மிமீ மழை 24 மணி நேரத்தில் பெய்த 409 சம்பவங்களும், திடீர் வெள்ளம் 168 முறையும், நிலச்சரிவு 186 முறையும் நிகழ்ந்துள்ளன. 24 மணி நேரத்தில் 30 செ.மீ.க்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட்ட 42 சம்பவங்கள், 182 பேரின் உயிரை பறித்து, அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
திடீர் வெள்ளம், கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் முறையே 119, 111, 71 பேர் உயிரிழந்துள்ளனர். கிஸ்ட்வார், அனந்தநாக், கந்தர்பால் மற்றும் டோடா ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளத்தால் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த யூனியன் பிரதேசத்தில் கனமழை மற்றும் கனத்த பனிப்பொழிவு முக்கிய பேரழிவுகளாக இருந்தபோதிலும், திடீர் வெள்ளம், இடி மின்னல் மற்றும் புயல் போன்ற நிகழ்வுகளின் தாக்கமும் அதிகரித்து வருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், உயரும் வெப்பநிலை, மேற்கு திசை காற்று மாற்றங்கள் மற்றும் பிராந்தியத்தின் புவியியல் அமைப்பு ஆகிய மூன்றும் முக்கிய காரணங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications