காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
காஷ்மீர் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்.
காஷ்மீர்: காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இன்று காலை வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி ஒருவரும் பலியாகியுள்ளார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அம்மாநிலம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நான்கு தீவிரவாதிகள் நாக்ரோடாவில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 அதிகாரிகளும் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications