மக்களே ஜாக்கிரதை.. ராஜஸ்தானில் புளூடூத் இயர்போன் வெடித்து.. 15 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ் குமார் நகர். இவர் சம்பத்தன்று தனது புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இயர்போன் வெடித்துச் சிதறியது. இதில் அந்த சிறுவன் மயக்கமடைந்தான். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை மீட்டு உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளனர். இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயர்போன் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு அச்சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே இயர்போன் வெடித்துச் சிதறி ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மருத்துவர்கள், இயர்போன் வெடித்துச் சிதறியதில் அந்த சிறுவனின் இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தகவலளித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications