மீண்டும் தடைபட்டுப் போன ஜல்லிக்கட்டு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா போன்ற சமூக ஆர்வலர் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. முன்னதாக இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரிக்க விலங்கு நல அமைப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்களை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனினும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை பானுமதி உள்ளிட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு பதிலாக, தீபக் மிஸ்ரா, ரமணா அமர்வுக்கு மாற்றப்பட்டது.
விளையாட்டிற்கு உட்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்களின் மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு மீண்டும் தற்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications