Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை..ஜம்மு காஷ்மீரின் தலைவிதியே மாறப் போகுது.. தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட பல பிரச்னைகளால் அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை அங்குள்ள மக்கள் மாற்ற விரும்புவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல்கட்ட தேர்தல் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ம் தேதியும் நடைபெறவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.

assembly elections 2024 election commission jammu kashmir 2024

ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி என அழைக்கப்படும் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் (பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சிகள் பிரதானமாக உள்ளன. இந்த 2 கட்சிகளும் தான் மாறி மாறி இங்கு ஆட்சியைப் பிடித்து வருகின்றன. அதேபோல் பாஜகவும், காங்கிரஸ் கட்சிகளும் ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே நான்குமுனைப் போட்டி நிலவவுள்ளது. கடந்த 2014 ம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 74 தொகுதிகள் பொது தொகுதிகளாகும். 9 தொகுதிகள் எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதியாகவும், 7 தொகுதி எஸ்சி பிரிவினருக்கான தனித்தொகுதியாகவும் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 44.46 லட்சம் பேர் ஆண்கள். 42.62 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம் உள்ளது. இதில், 18 வயது முதல் 19 வயது நிரம்பிய முதல் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.71 லட்சமாக உள்ளது.

மேலும், இளம் வாக்காளர்களின் (20 முதல் 29 வயது) எண்ணிக்கை என்பது 20.7 லட்சமாக உள்ளது. மொத்தம் 9,169 இடங்களில் 11,800 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், நகரங்களில் 2,332 வாக்குச்சாவடி மையங்களும், கிராமங்களில் 9,506 வாக்குச்சாவடி மையங்களும் அமைய உள்ளது. வாக்குச்சாவடிக்கான சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 735 ஆக உள்ளது. மேலும் அமைதியாக தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு கடந்த வாரம் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது. இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் தலைவிதியை மாற்ற விரும்புகின்றனர். வாக்காளர்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்த நிலையில், அங்கிருந்த இளைஞர்களும் பாதை மாறி அந்த அமைப்புகளுடன் சேரும் நிலை ஏற்பட்டது. சமீபகாலமாக இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு முன்னர் 2019 இல் நடக்கவிருந்த தேர்தல் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, 2024 இல் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் இளைஞர்களின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+