Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு! தீவிரவாதிகளை நெருங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்த பாக்.! மீண்டும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே பூஞ்சில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு நிலத்தடி பங்கரை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்தவர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Jammu and Kashmir Poonch Hideout Busted Tiffin Box Bombs and IEDs Seized

பாதுகாப்புப் படை

இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு நிலத்தடி பங்கரைப் பாதுகாப்புப் படையினர் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு

பூஞ்சின் சூரன்கோட் என்ற பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தப் பங்கரை கண்டுபிடித்தனர். இதில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ​ஐந்து வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டு வயர்லெஸ் செட்கள், மூன்று போர்வைகளும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருக்கும் பொருட்களை வைத்துப் பார்த்தால் தீவிரவாதிகள் சமீபத்தில் அங்குத் தங்கியது போலவே தெரிகிறது. இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரி பகுதிகளில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேலும், என்கவுண்டர்களின் மையமாக மாறியுள்ளன. இந்தச் சூழலில் அதே இடத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் வேறு எதாவது இடத்தில் நாசவேலையில் ஈடுபடவே இதை ரெடி செய்திருந்தனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்துமீறும் பாகிஸ்தான்

இந்தத் தீவிரவாதிகளின் பங்கரை கண்டுபிடித்த கொஞ்ச நேரத்திலேயே பூஞ்ச் ​​உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு தனது துப்பாக்கிச் சூட்டை மீண்டும் தொடங்கியது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மே 4ம் தேதி இரவு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவம் உடனடியாக பிதலடி கொடுத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் 11வது முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்து வருகிறது. அதேநேரம் இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தியா நடவடிக்கைகள்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. 1960ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், வான்வெளியைப் பயன்படுத்தத் தடை, தூதரகத் தொடர்பைக் குறைத்துக் கொண்டது எனப் பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+