Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மாநிலமாகும் ஜம்மு காஷ்மீர்? புதிய பிளானில் மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் சூசகம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. இந்நிலையில் தான் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் இருந்தது. இது சிறந்து அந்தஸ்துடன் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தது.

யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு

யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு பொதுமக்கள் தேர்வு செய்த ஆட்சி இல்லை. துணை நிலை ஆளுநர் மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவராக இருந்த மனோஜ் சின்கா, துணை நிலை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை

இவர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தொகுதிகள் மறுவரையறை செய்ய எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆய்வு செய்து ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை பணியை முடித்துள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மீண்டும் மாநிலமா?

மீண்டும் மாநிலமா?

இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதனால் தான் அங்கு தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதுபற்றி மத்திய அரசு சார்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் புதிய மாநிலமாக மீண்டும் உருவாக்கப்படாலம் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு வெளிப்படுத்தி உள்ளது.

நிர்மலா சீதாராமன் பேச்சு

நிர்மலா சீதாராமன் பேச்சு

அதாவது கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் பாரதிய விசார கேந்திரம் சார்பில் கூட்டுறவு முறையில் கூட்டாச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரி பகிர்வு பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வரி பங்கீடு எவ்வளவு?

வரி பங்கீடு எவ்வளவு?

நாட்டில் 14வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளித்து வருகிறது. 2014-15ம் ஆண்டில் இரந்து அனைத்து வகையான வரிகளிலும் மாநில அரசுகளுக்கு 42 சதவீதம் பகிர்ந்தளிக்க வேண்டும் என நிதிக்குழு பரிந்துரை செய்தது. இதில் எந்த தயக்கமும் இன்றி பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு 32 சதவீதம் மட்டுமே பங்கீடப்பட்டு வந்தது.

விரைவில் மாறலாம்

விரைவில் மாறலாம்

மாநில அரசுகளுக்கு 42 சதவீத வரியை பகிர்ந்து கொள்வதன் மூலம் மத்திய அரசுக்கான வருவாய் குறையும். இதுபற்றி எந்த கவலையும் இன்றி பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இல்லை. விரைவில் கூட மாநிலமாக மாறலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இல்லாததால் தற்போது 41 சதவீத வரி பங்கீட்டு செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதன்மூலம் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் மீண்டும் றெக்கை கட்டி பறக்க துவங்கி உள்ளனர். மேலும் தற்போது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் பெருமளவு குறைந்துள்ள நிலையில் மீண்டும் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கலாம். இருப்பினும் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+