Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காங்கிரஸுடனான கூட்டணிக்கு பரூக் அப்துல்லா கடும் எதிர்ப்பு- தனித்து போட்டி?

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் மற்றும் எந்த ஒரு கட்சியுடனான கூட்டணிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தேசிய மாநாட்டுக் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவோ, காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த பேசுவார்த்தை நடத்த முன்வந்தால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடைசியாக 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனம் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் சட்டசபை உண்டு. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை.

Jammu Kashmir Assembly Election 2024 India bloc 2024

ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகளில் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் நெருக்கடி கொடுத்திருந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 3 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இதில் தேசிய மாநாட்டு கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கின்றன. ஆனால் லோக்சபா தேர்தலில் 3 கட்சிகளுமே தனித்தே போட்டியிட்டன.

இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் "இந்தியா" கூட்டணியாக 3 கட்சிகளும் இணைந்து களம் காணுமா? அல்லது வழக்கம் போல தனித்தே போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு கட்சியுடனான கூட்டணியையும் எதிர்க்கிறே. தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. இது தொடர்பாக கட்சியில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் முதல்வரும் பரூக் அப்துல்லாவின் மகனுமான ஒமர் அப்துல்லா, கூட்டணி தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்; ஆனால் காங்கிரஸ் மேலிடத்திடம் அவர்கள் ஒப்புதலைப் பெறவில்லை. தற்போது தேர்தலுக்கு குறுகிய காலம்தான் உள்ளது. இருந்த போதும் கூட்டணி குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார். ஆக, இப்போது காங்கிரஸ் கையில்தான் பந்து இருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+