Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் LIVE: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நிறைவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.

jammu and kashmir assembly election 2024  bjp  congress                                                                                       2024

Sep 18, 2024, 7:58 pm IST

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. கிஷ்த்வார் பகுதியில் அதிகபட்சமாக 77.23% வாக்குகளும், புல்வாமா பகுதியில் குறைந்தபட்சமாக 46.03% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Sep 18, 2024, 6:02 pm IST

ஜம்மு காஷ்மீரில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19% வாக்குகள் பதிவு
Sep 18, 2024, 3:52 pm IST

ஜம்மு காஷ்மீரில் பிற்பகல் 3 மணி வரை 50.65% வாக்குகள் பதிவுவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கிஷ்த்வார் பகுதியில் 70.03% வாக்குகளும், குறைந்த பட்சமாக புல்வாமா பகுதியில் 36.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Sep 18, 2024, 2:14 pm IST

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள் காஷ்மீரில் வலிமையாக இருக்கிறது. மக்கள் கோபமாக உள்ளனர். மாநிலத்தை 2 ஆகப் பிரித்ததை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை- சிபிஐ மூத்த தலைவர் டி.ராஜா
Sep 18, 2024, 1:33 pm IST

ஜம்மு காஷ்மீர் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தலை சந்த்இக்கிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்களிக்கின்றனர். வாக்கு சதவீதம் இயல்பாகவே 50%ஐ தாண்டும் நிலைமைதான் உள்ளது- தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குலாம் மொஹி உதின் மீர்
Sep 18, 2024, 12:01 pm IST

ஜம்மு காஷ்மீரில் முற்பகல் 11 மணிவரை 26% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. முன்னதாக காலை 9 மணி வரை 11% வாக்குகள் பதிவாகின.
Sep 18, 2024, 11:57 am IST

ஜம்மு காஷ்மீரில் முற்பகல் 11 மணிவரை 25% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. முன்னதாக காலை 9 மணி வரை 11% வாக்குகள் பதிவாகின.
Sep 18, 2024, 11:37 am IST

ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு அம்மாநிலத்தில் நடைபெறுகிறது. நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது - இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல். இது ஜம்மு காஷ்மீரை அவமதிக்கும் செயலாகும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவிற்காக செல்லவேண்டும் - உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும்; வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரும் - இது பெண்களை வலிமையாக்கும்; 'அநீதி யுகத்திலிருந்து' உங்களை வெளியே கொண்டு வரும்.… ஜம்மு காஷ்மீரை மீண்டும் செழிப்பாக மாற்றும். இன்று, அதிக எண்ணிக்கையில் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள் - இந்தியாவுக்கு வாக்களியுங்கள்- - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Sep 18, 2024, 11:32 am IST

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின் 245 வாக்குச் சாவடிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. புல்வாமாவில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன- பிடி நித்யா, புல்வாமா காவல்துறை அதிகாரி
Sep 18, 2024, 10:58 am IST

அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறது. 10 ஆண்டுகள் இதற்குதான் காத்திருக்கிறோம். களத் தகவல்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது- ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர், பாரமுல்லா வேட்பாளர்
Sep 18, 2024, 10:35 am IST

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இளைனர்கள், பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
Sep 18, 2024, 9:44 am IST

ஜம்மு காஷ்மீரில் காலை 9 மணி வரை 11% வாக்குகள் பதிவாகின. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
Sep 18, 2024, 9:34 am IST

ஜம்மு காஷ்மீர் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். காஷ்மீரில் பிரசாரம் செய்த மோடி அப்துல்லாக்கள், காந்திகள், முப்திகள் குடும்பங்களுக்கு எதிராக பேசினார். அப்போதே தமது தோல்வியை மோடி ஒப்புக் கொண்டார். ஜம்மு காஷ்மீரில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்
Sep 18, 2024, 9:05 am IST

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். நிச்சயமாக பாஜகதான் வெல்லும். காஷ்மீரில் பயங்கரவாதம்தான் மிகப் பெரிய பிரச்சனை. பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறது பாஜக. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவும்- பாஜக வேட்பாளர் க்‌ஷ்வர் சகுன் பரிஹார்
Sep 18, 2024, 8:16 am IST

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி
Sep 18, 2024, 8:00 am IST

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகிறோம். அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்- புல்வாமா தொகுதி சுயேட்சை வேட்பாளர் முகமது அயூப் மிர்
Sep 18, 2024, 7:46 am IST

10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடைபெறுகிறது.. இந்த தேர்தல் மூலம் பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பின்மை முடிவுக்கு வர வேண்டும்.. அதற்காக வாக்களித்தோம்.. பல இடங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sep 18, 2024, 7:27 am IST

ஜம்மு காஷ்மீர் 24 தொகுதிகளிலும் காலை 7 மணி முதலே விறு விறு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sep 18, 2024, 7:07 am IST

ஜம்மு காஷ்மீரில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
Sep 18, 2024, 6:50 am IST

ஜம்மு காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் முழு உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு
Sep 18, 2024, 6:27 am IST

ஜம்மு காஷ்மீர் வாக்கு சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது
Sep 18, 2024, 6:25 am IST

முதல் கட்ட தேர்தலில் சிபிஎம் கட்சியின் யூசுப் தரிகாமி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகினா இடூ, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்தாஜ் மட்னி, அப்துல் ரெஹ்மான் வீரி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஆகியோர் விஐபி வேட்பாளர்கள்.
Sep 18, 2024, 6:19 am IST

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். முதல் கட்ட தேர்தலில் வாக்காளிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. 24 தொகுதிகளிலும் 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14,000 பேர் முதல் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
Sep 18, 2024, 6:03 am IST

ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இது.
Sep 18, 2024, 5:12 am IST

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பிரிவினைவாதி பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சியும் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமியின் முன்னாள் தீவிரவாதிகளும் கை கோர்த்து கூட்டணி அமைத்துள்ளனர்
Sep 18, 2024, 12:15 am IST

இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 5 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால், காங்கிரசும், தேசிய மாநாடும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அதாவது, கூட்டணி கட்சிகளே ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடுகின்றன.
Sep 18, 2024, 12:13 am IST

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவரது தேசிய மாநாடு கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Sep 18, 2024, 12:12 am IST

இந்த தேர்தலில் பாஜக, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிகள் தனித்து களம் கண்டுள்ளன. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தின் ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
Sep 18, 2024, 12:10 am IST

முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் இன்றூ நடைபெற உள்ளது. இதில், காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.
Sep 18, 2024, 12:09 am IST

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலும், வரும் 25 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்கிறது.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+