காஷ்மீர் தேர்தல்: பெண்களுக்கு பாஜக உரிமை தருகிற லட்சணம் இது? உக்கிரமாக போராட்டம் நடத்திய மகளிர் அணி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என கொந்தளித்த அக்கட்சியின் மகளிர் அணியினர் ஸ்ரீநகரில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெறும் வரையில் மொத்தம் 42 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒருவர்தான் பெண் என்பதால் மகளிர் அணி நிர்வாகிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை பாஜக அறிவித்தது முதலே ஏகப்பட்ட குழப்பம். முதல் கட்டமாக 42 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக. ஆனால் உடனேயே இந்த வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வாபஸ் பெற்றது.

இதனையடுத்து 15 வேட்பாளர்களுடன் முதல் கட்ட பட்டியல் மீண்டும் வெளியானது. 2-வது பட்டியலில் 1 வேட்பாளர் இடம் பெற்றிருந்தார். 3-வதாக நேற்று 26 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.
பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது; திடீரென பாஜகவில் இணைந்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனால் கொந்தளித்துப் போன பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறங்குவோம் அல்லது கட்சியைவிட்டே ஓடிப் போவோம் என எச்சரித்தனர்.
இந்த நிலையில் பாஜக அறிவித்த மொத்தம் 42 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண்ணுக்குதான் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளும் ஆவேசமடைந்தனர்.
இதனையடுத்து ஜம்முவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், பெண்களுக்கு சம உரிமை தருவதாக கட்சி சொல்கிறது. ஆனால் வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண்ணுக்குதான் வாய்ப்பு தந்துள்ளது கட்சி மேலிடம். அப்படியானால் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிற பெண்களுக்கு எப்போதுதான் வாய்ப்பு கிடைக்கும்? என்கிற குமுறலுடன் கட்சி மேலிடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் பாஜக அலுவலகம் முன்பாக பதற்றம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications