பாஜகவிற்கு துணைமுதல்வர் பதவி இல்லை- மெஹபூபா முடிவால் காஷ்மீர் கூட்டணி அரசமைப்பில் சிக்கல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தான் முதல்வராக பதவி ஏற்றால் பாஜகவுக்கு துணை முதலமைச்சர் பதவி தர முடியாது என மெஹபூபா முஃப்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் காஷ்மீரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் முஃப்தி முகம்மது சயித்தின் மறைவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அரசியலில் ஒரு பிடிப்பற்ற தன்மை நிலவுகிறது. முஃப்தி முகம்மது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி பாஜக கூட்டணி அரசு அவரது மறைவை அடுத்து அதிகாரத்தை இழந்துவிட்டது.

கூட்டணியில் பெரிய கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.பியும், முஃப்தியின் மகளுமான மெஹபூபா புதிய முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துக்கம் அனுஷ்டித்து வரும் அவர் பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக முதலில் தகவல் வெளியானது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் நேற்று மெஹபூபாவை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்புகளின் போது ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய விவாதங்கள் நடந்ததாகவும் தெரிகிறது.
பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் கூட்டணி அரசு அமைப்பதில் பொதுவாக தயக்கம் காட்டி வரும் மெஹபூபா, நிதின் கட்கரியிடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிகிறது. பாஜகவின் முந்திய திட்டமான சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற உடன்பாட்டை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மெஹபூபா, தமது தந்தை அளித்தது போல பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியை அளிக்க தாம் தயாராக இல்லை என நிதின் கட்கரியிடம் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மெஹபூபா தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று அவரை சந்தித்த சோனியா காந்தி, புதிதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இதனால் ஜம்மு காஷ்மீரில் அடுத்து என்னமாதிரியான அரசு அமையும் என்று பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications