அடுத்த வாக்கு வேட்டை.. 9 மாநில ஜாட் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா உட்பட 9 மாநிலங்களில் வாழும் ஜாட் இனத்தவரின் வாக்குகளை அப்படியே வேட்டையாட அவர்களது நீண்டநாள் கோரிக்கையான மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மும்முரம் காட்ட தொடங்கியிருக்கிறது.

மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த வியாழன்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுப் பணிகளில் பயனடையும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனத்தவரை இணைப்பது குறித்த இறுதி முடிவை தெரிவிக்குமாறு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஜாட் இன அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில் மத்திய அரசு இறுதி முடிவெடுத்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உடனே இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாட் இனப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே உணவு பாதுகாப்பு திட்டம், நிலம் கையகப்படுத்துதல் மசோதா என வாக்கு வேட்டைக்காக அஸ்திரங்களை ஏவிவிட்டு காத்திருக்கும் காங்கிரஸ், இப்போது ஜாட் இனத்தவரின் கோரிக்கையை நிறைவேற்றி 9 மாநிலத்தில் வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என கனவு காணத் தொடங்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+