காஷ்மீர்: சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை- ராணுவ வீரர்களின் காலை தொட்டு வணங்கிய தந்தை-நெகிழ்ச்சி வீடியோ
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை காட்டிய நமது ராணுவ வீரர்களின் காலை தொட்டு அவரது தந்தை வணங்கிய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் சதூரா என்ற இடத்தில் ராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஒரு இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

சரணடைய வேண்டுகோள்
அங்கே பதுங்கியிருந்தவர்களில் ஜஹாங்கீர் என்ற தீவிரவாதியும் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜஹாங்கீர்! நீங்க சரணடையுங்க.. யாரும் எதுவும் செய்யமாட்டோம் என்ற அறிவிப்பு கொடுத்தபடியே ராணுவத்தினர் முன்னேறிச் சென்றனர்.

தீவிரவாதியிடன் கருணை
அப்போது வேறு யாரும் அங்க இருக்காங்களா? வேற ஆயுதங்கள் என ராணுவத்தினர் கேட்டுக் கொண்டே இருக்க தீவிரவாதி ஜஹாங்கீர் மறைவிடத்தில் இருந்து கைகளைத் தூக்கியபடியே வெளியே வந்தார். அவரை நெருங்கிய ராணுவத்தினர் கீழே உட்காருமாறு சொல்லிய உடனே தண்ணி கொடுங்க என அன்புடன் கூறினர்.

ராணுவ வீரர்களின் பாதம் தொட்ட தந்தை
இந்த நிகழ்ச்சிகளை அங்கே பார்த்துக் கொண்டிருந்த ஜஹாங்கீரின் தந்தை நன்றிப் பெருக்கில் ராணுவத்தினரின் கால்களில் விழுந்து கும்பிட்டார். அப்போது ராணுவத்தினர், உங்க மகன் இப்போது நல்ல செயலைத்தான் செய்திருக்கிறார். அவரது கடந்த காலதவறுகளை மன்னித்துவிடலாம். இனிமேல் தீவிரவாதிகளுடன் சேராமல் இருக்கட்டும் என அறிவுரை கூறினர்.
|
வைரல் வீடியோ
இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் செல்போன் சேவையை ராணுவம் நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த ஆபரேஷன் முடிவடைந்த நிலையில் செல்போன் சேவைகள் மீண்டும் இயங்கின. ராணுவத்தின் கருணைமிக்க இந்த செயல் வீடியோவாக வெளியிடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications