For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு சரியானது அல்ல: சாடும் பி.வி. ஆச்சார்யா!!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு முறை சரியானது அல்ல என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Jaya case- SPP questions judges calculations, says excellent case for appeal

இந்த தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞராக ஆஜராகிய பி.வி. ஆச்சார்யா கூறியதாவது:

நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கும் போது சொத்துகளை மதிப்பீடு செய்து கூறிய முறை சரியானது அல்ல. அவர் போட்டிருக்கும் கூட்டுத் தொகைகளில் பிழைகள் உள்ளன.

இது ஒன்றே மேல்முறையீட்டுக்கு செல்ல போதுமானதாகும். கட்டுமான செலவு, திருமண செலவு ஆகியவற்றை ரூ5 கோடி என மதிப்பீடு செய்திருக்கிறார் நீதிபதி குமாரசாமி. வங்கிக் கடன்கள் குறித்து நீதிபதி குமாரசாமி செய்திருக்கும் மதிப்பீடு தவறானதாக இருக்கிறது. இந்த அடிப்படையே மேல்முறையீடு செல்வதற்கு போதுமானதாக இருக்கும்.

இது தொடர்பாக கர்நாடகா அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

English summary
Special Public Prosecutor, B V Acharya in the J Jayalalithaa case has questioned the calculation of the judge while delivering the verdict. Acharya speaking to media persons today said that the court has erred and made a glaring arithmetic error and this will be one of the main grounds to challenge the verdict in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X