For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறை அதிகாரிகள் அனுமதி அளித்தும் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத ஓ.பி.எஸ்.

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: தான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா தங்களிடம் கூறியதாக பெங்களூர் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jaya wants to avoid visitors

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காண தினமும் ஏராளமான அதிமுகவினர், அரசு அதிகாரிகள் சிறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறார்.

ஜெயலலிதா சந்திக்க விரும்பும் நபர்களுக்கு மட்டுமே அவரை பார்க்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற கையோடு ஓ. பன்னீர் செல்வம் விமானம் மூலம் திங்கட்கிழமை இரவு பெங்ளூர் வந்தார். செவ்வாய்க்கிழமை அவர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற சென்றார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா.

இந்நிலையில் இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,

முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை சந்திக்க நாங்கள் அனுமதி அளித்துவிட்டோம். ஆனால் ஜெயலலிதா தான் நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார் என்றனர்.

English summary
Jayalalithaa has told prison officials that she doesn't want to see any visitors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X