டெல்லியில் மோடியை நாளை சந்திக்கிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முதலாக நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

நாளை மதியம் 2 மணிக்கு டெல்லி சென்றடையும் ஜெயலலிதா அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். சற்று நேரம் அங்கு ஓய்வு எடுக்கும் ஜெயலலிதா, மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிகிறது.

Jayalalitha will meet Modi on Tuesday

ஜெயலலிதாவுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், முதல்வரின் செயலாளர்கள் வெங்கட் ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.

அப்போது, தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 32 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறார்.

இரவு 7 மணிக்கு டெல்லி விமான நிலையம் செல்லும் ஜெயலலிதா, தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இரவு 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+