கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்: ஜெ. வலியுறுத்தல்
விஜயவாடா: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடாவில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாசித்த ஜெயலலிதா உரை விவரம்:
தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்புக்கு தமிழக அரசு 30 ஆயிரம் அவசர கால உதவி கோரும் கருவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கருவி மீனவர்களுக்கு படிப்படியாக இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.2 கோடி கொடுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கான 75% மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ரூ203 கோடி நிதி
தமிழ்நாட்டுக்கு மீன்வளத்துறைக்கு மத்திய அரசு இன்னும் ரூ.203 கோடி நிதி தர வேண்டியதுள்ளது. சின்னமுட்டம், குளச்சல், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் துறைமுக பணிகளை முடிக்க இந்த நிதியை மத்திய அரசு உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடலோர மண்டல கட்டுப்பாடு திட்டங்கள்
தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 2 முறை ஆம்லா ஆபரேஷன் ஒத்திகை நடத்தப்படுகிறது. அது போல தமிழக மீனவர்கள் 39,401 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோர மண்டல கட்டுப்பாடு திட்டங்கள் தமிழக மீனவர்களின் நலனை பாதிப்பதாக உள்ளது. எனவே அதில் இருந்து தமிழக மீனவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு
தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான ரூ.1520 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மாவோயிஸ்டுகள்..
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் சந்திக்கும் முச்சந்தி வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை 2013-ல் காணப்பட்டது. தமிழக அரசு இது தொடர்பாக பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதனால் 5 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். மாவோயிஸ்டுகளை ஒடுக்க நீலகிரி மாவட்ட உள்ளூர் போலீசாருக்கு நவீன கருவிகள் வழங்கப்பட வேண்டும். எனவே மத்திய உள்துறை அமைச்சகம், நீலகிரி மாவட்டத்தையும் பாதுகாப்பு தொடர்பான செலவின பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவோயிஸ்டுகளை அடக்கும் விதமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

சாலை போக்குவரத்து மசோதா
மத்திய அரசு தயாரித்துள்ள சாலை போக்குவரத்து வரைவு மசோதாவானது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே அந்த வரைவு மசோதாவை தமிழக அரசு ஏற்காது. அதை அமல்படுத்தும் முன்பு மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

கூடங்குளம்
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் முதல் யூனிட் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அங்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் தரப்பட்டது. தற்போது 24.6.2015 முதல் பழுதுபார்ப்பு பணிக்காக கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது போல கூடங்குளத்தில் 2-வது மின் உற்பத்தி பிரிவை விரைவில் தொடங்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications