ஜெயலலிதா 4 ஆண்டு ஜெயில்… நோ பெயில்: அக்டோபர் 5 வரை ஹைகோர்ட் லீவ்!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக ஜாமீன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைக்கு செல்லும் ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யமுடியும். அக்டோபர் 5வரை தசரா விடுமுறை என்பதால் அதன்பின்னர்தான் ஜாமீன்மனு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையுடன், 100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனையுடன் 4 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. அவரால் உடனடியாக ஜாமீன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் மனு அப்பீல் செய்யமுடியும். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரும் 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அக்டோபர் 5ஆம் தேதிக்கு மேல்தான் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலும் அவசர வழக்குகளை விசாரிக்கும் வசதியில்லை என்பதால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications