Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்ட் தேர்தல்: ஆட்சியை தீர்மானிக்கும் கோல்ஹனில் வெற்றி யாருக்கு? பாஜகவுக்கு கடும் சவால்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாஜக - ஆளும் ஜேஎம்எம் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்டில் ஆட்சி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் கோல்ஹான் பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு வாக்குகளை கவர பாஜகவும் ஜே.எம்.எம் கட்சிகளும் வியூகங்கள் வகுத்து வருகின்றன.

பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் தனி மாநிலமாக உருவானது. இதுவரை 5 சட்டமன்ற தேர்தலை சந்தித்து இருக்கும் ஜார்க்கண்ட்டில் வரும் 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும் மற்றும் 20 ஆம் தேதி 38 தொகுதிகளிலும் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

jharkhand assembly election 2024 jharkhand bjp

ஜார்க்கண்டை பொறுத்தவரை அடிக்கடி அரசியல் குழப்பங்களை சந்தித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 7 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். 3 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் தேர்தல்: இந்த தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஓர் அணியும், பாஜக தலைமையில் மற்றொரு அணியும் மோதுகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் அக்கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுவரை நடந்த தேர்தல்களில் பலமுனை போட்டி நிலவியது. ஆனால், இந்த முறை, பாஜக - ஜே.எம்.எம்.கூட்டணி இடையேதான் போட்டிநிலவுகிறது. பாஜக கூட்டணியில் அந்த கட்சி 68 தொகுதிகளிலும், அகில இந்திய ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

கோல்ஹன் தொகுதி: மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இது தவிர மற்ற கட்சிகளும் போட்டியிடுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும், பாஜக கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜார்க்கண்டில் கோல்ஹன் பிராந்தியம் ஆட்சியை பிடிக்கும் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

4 முதல்வர்களை தந்த தொகுதி: கோல்ஹான் பிராந்தியத்தில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இதில், ஒன்பது தொகுதிகள் எஸ்.டி பிரிவினருக்கும் ஒரு தொகுதி எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய தொகுதிகள் பொது தொகுதிகளாகும். ஜார்க்கண்டில் இதுவரை பதவி வகித்த 7 முதல்வர்களில் அர்ஜுன் முண்டா, மது கோடா, சம்பாய் சோரன் மற்றும் தாஸ் என நான்கு முதல்வர்களை வழங்கிய பிராந்தியம் இந்த கோல்ஹான் தான்.

பாஜகவின் வியூகம்: கோல்ஹன் பிராந்தியத்தில் அனைத்து தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் ஹேமந்த் சோரன் வியூகம் வகுத்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 11 தொகுதிகளில் ஜே.எம்.எம் கட்சி வென்றது. இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் சுயேட்சையும் வென்றனர். பாஜக படு தோல்வி அடைந்தது.

ஆனால், இந்த முறை பழங்குடியின தலைவரான சம்பாய் சோரனை சேர்த்து இருப்பதால் பாஜக கணிசமான தொகுதிகளை வெல்லும் முனைப்பிலுள்ளது. ஜே எம் எம் கட்சி பழங்குடியின மக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் நோக்கில் வியூகம் வகுத்து வரும் நிலையில், பாஜக மகளிர் வாக்குகளை கவர தீவிரம் காட்டுகிறது.

முக்தி மோர்ச்சாவில் பிளவு: மகளிருக்காக மத்திய பாஜக முன்னெடுத்த திட்டங்களை வைத்து பாஜக தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஏற்பட்டுள்ள பிளவு ஆகியவை இந்த முறை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு இந்த முறை பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+