தமிழகம் பாணியில் ஜார்க்கண்ட் அதிரடி: இடஒதுக்கீடு 77% ஆக அதிகரிப்பு- 9வது அட்டவணையில் சேர்க்க தீவிரம்!
ராஞ்சி: தமிழகத்தைப் போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இதற்கான சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்கிற நிலைமை உள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் வழங்கியது.

69% இடஒதுக்கீடு வழக்கு
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னொரு பக்கம், தமிழகத்தைப் பின்பற்றி இடஒதுக்கீட்டு அளவை அதிக்கரிக்கும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டும் வருகின்றன.

ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்க் முன்னர் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை இன்று ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்த இடஒதுக்கீடு அளவை 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தைப் போல 77% இடஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவும் அம்மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இடஒதுக்கீடு அளவு என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு: எஸ்சி- 10%; எஸ்டி 26%; ஓபிசி 14%; இடபிள்யூஎஸ்- 10% இந்த இடஒதுக்கீடு அளவு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி எஸ்சி- 12%; எஸ்டி-28%; இபிசி-15%; ஓபிசி-12%; இடபிள்யூஎஸ்- 10% இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரித்துள்ளது.

அதிரடி ஜார்க்கண்ட் அரசு
அண்மையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த தீர்ப்பின் போது, மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகக் கூடாது என்ற தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆகையால் 50% இடஒதுக்கீட்டு வரம்பை உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மீறுகிறது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் வைக்கவும் இல்லை. இது ஒருவகையில் மாநிலங்கள் இடஒதுக்கீடு அளவை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications