ஜேஎம்எம் கூட மதிக்கலியே.. காங்கிரசுக்கு நோஸ் கட்.. ராஜ்யசபா வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்து அதிரடி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தன்னிச்சையாக அறிவித்ததால் காங்கிரஸ் கட்சி கடும் கோபத்தில் இருக்கிறதாம். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்றும் பிரதான கட்சிகள். மாநில கட்சியான ஜே.எம்.எம், அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து பாஜக, காங்கிரஸ் இரண்டின் மீது சவாரி செய்வது வழக்கம். இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜே.எம்.எம் 30, காங்கிரஸ் 17 இடங்களைப் பெற்றது. ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், சிபிஐஎம்எல் ஆகியவை ஆதரவுடன் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2020-ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜே.எம்.எம். நிறுவனர் சிபு சோரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிபுசோரனை ஆதரித்தனர். அப்போதே அடுத்த ராஜ்யசபா தேர்தல் சீட் காங்கிரஸுக்குதான் என எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் இரு கட்சிகளிடையே ஏற்பட்டது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை ஹேமந்த் சோரன் சந்தித்தும் பேசியிருந்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநில காங்கிரசார் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் ஜே.எம்.எம். கட்சி திடீரென அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் மஹூவா மாஞ்சியை ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஜே.எம்.எம். கட்சியின் இத்தகைய நிலைப்பாட்டால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications