"370வது பிரிவை நீக்கினால் ஐ.நா. தீர்மானப்படி காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலை வரும்"
ஸ்ரீநகர்: அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால் இந்தியாவுடன் இருப்பதா? இல்லை பிரிந்து செல்வதா? என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தும் உரிமை ஜம்மு காஷ்மீரத்துக்கு இயல்பாகவே வந்துவிடும் என்று அரசியல் சாசன வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரசியல் சாசன வல்லுநர் முசாஃபர் ஹூசைன் பெய்க் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது மொத்தம் 562 தேசங்கள் இங்கே இருந்தன. இவை பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைந்தவை அல்ல. தனி தேசங்கள்.
பின்னர் இந்த தேசங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவுடன் இந்தியாவின் ஒருபகுதியாகவே இணைந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனது.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது இந்த மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே 370வது பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியிருப்பது.
இப்போது நீங்கள் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர்.
இவ்வாறு முசாஃபர் ஹூசைன் பெய்க் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications