ஜே.என்.யூ விவகாரத்தில் டோணி விளாசிய ஹெலிகாப்டர் ஷாட்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் முழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், கவுதம் கம்பீர், குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத் போன்றோர் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியும், தனது ஆதரவு கரத்தை ராணுவத்தினருக்கு நீட்டியுள்ளார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது சரிதான் என்று இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இவ்வாறான கூட்டங்கள்தான் கருத்து சுதந்திரத்தை வளர்க்கும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.
ஆனால், டோணி இதற்கு நேர் எதிர்மாறான கருத்தை கொண்டுள்ளார். தனது டிவிட்டுகளில் மன ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் டோணி. இருப்பினும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் என்ற பெயரை அவர் குறிப்பிடவில்லை.
|
டோணி டிவிட்
டோணி நேற்று வெளியிட்ட தனது டிவிட் ஒன்றில் கூறுகையில், "நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டுள்ளோம். ஆனால், நாம் இவ்வாறு (பாதுகாப்பாக) பேசிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்திருப்பது நமது பாதுகாப்பு படையினர்தான்" என்று தெரிவித்துள்ளார்.
|
தேச நலன்
இதையடுத்து வெளியிட்ட மற்றொரு டிவிட்டில் "சிறப்பு படையினரும், கமாண்டோ வீரர்களும், உங்களையும், என்னையும் போன்ற சாதாரண மனிதர்கள்தான். ஆனால், சுய நலத்திற்கு முன்பாக தேசத்தின் நலனைத்தான் முக்கியம் என கருத அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்ச் விட்ட தத்
அப்சல் குரு, தியாகி என்றால், லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா (சியாச்சின் பனிச்சரிவில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்) யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார் குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத்.

தவான் ஆதரவு
கிரிக்கெட் வீரர் ஷிகர்தவான் "ஒருவர் வாழும் நாட்டை தவறாக பேசக்கூடாது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும், தேசிய கொடியை ஏற்ற வேண்டும்" என்று தனது கருத்தை நேரடியாகவே தெரிவித்திருந்தார்.

கம்பீர் கடுங்கோபம்
மற்றொரு கிரிக்கெட் வீரர் கவுதம்கம்பீரும், தேச நலனுக்கு முன்பாக, அரசியல் நலனை அரசியல்வாதிகள் பார்க்க கூடாது என்றும், அரசியல்வாதிகளே வளருங்கள் என்றும் கூறியிருந்தார். ஜே.என்.யூ வளாகத்தில் அப்சல் குரு ஆதரவு கோஷம் முழங்கப்பட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications