81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து எரித்த 21 வயது பணியாள் கைது
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சமானது நிலவி வரும் நிலையில் அதனை அதிகப்படுத்தி உள்ளது 81 வயதான மூதாட்டி ஒருவர் மீதான பாலியல் வன்முறைச் சம்பவம்.
தெற்கு டெல்லியில் வசித்துவந்த 81 வயதான மூதாட்டி ஒருவர், தன்னுடைய வீட்டு வேலைக்காரராலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொலையாளியான வீட்டு பணியாளர் அம்மூதாட்டியின் சடலத்தை எரிக்கவும் செய்துள்ளார்.
பத்திரிக்கையாளர் மனைவி:
பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்மணியான ரேகா டுகல், மறைந்த யுஎன்ஐ முன்னாள் பத்திரிக்கையாளர் கே.கே.டுகலின் மனைவியாவார்.
மீட்கப்பட உடல்:
ரேகாவின் எரிக்கப்பட்ட உடலானது கடந்த திங்களன்று கைலாஷ் பகுதியில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.
கொலை செய்த பணியாளர்:
இவ்வழக்கில் போலீசார் ரேகாவின் வீட்டுப் பணியாளரான 21 வயது நீரஜ் சாகி என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் 10 மாதங்களுக்கு முன்பாகத்தான் ரேகாவின் வீட்டில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். பீகாரின் மதுபானி பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ்.
விபத்தாக நினைத்த போலீஸ்:
இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது, ரேகவின் மகள் வீட்டில் இல்லை. மேலும், முதலில் இது விபத்தால் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் நினைத்திருந்துள்ளனர். அதன்பின்புதான் நீரஜின் மீதான சந்தேகம் வலுப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.
ஒப்புக் கொண்ட குற்றவாளி:
மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளியான நீரஜ், அப்பெண்ணை பலாத்காரம் செய்தபின்பு, அதனை மறைப்பதற்காகவே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விலையுயர்ந்த பொருட்களையும் ரேகாவின் வீட்டில் இருந்து திருடிச் சென்றுள்ளார்.
போலீஸ் காவலில் விசாரணை:
நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது, போலீசார் நீரஜை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதனைத் தொடர்ந்து நீதிபதி அனு அகர்வால் நீரஜை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
கழுத்தை நெறித்துக் கொலை:
" ரேகாவின் உடற்கூறு ஆய்வின் முடிவுப்படி, பலாத்காரத்திற்குப் பின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளார் என்பதும், அதன்பின்னர் எரிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொலை நகரம் டெல்லி:
81 வயது பெண்மணி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியை கொலைகளின் நகராக உருமாற்றியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications