'சனாதன' ஒழிப்பு.. "மும்பை சதி" 'அந்த 2 பேர்"..ஜேபி நட்டா சரமாரி புது குண்டு! உதயநிதிக்கு தெரியுமா?
ஜாஸ்பூர்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்கு காரணமே 'மும்பை சதிதான்' என பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா பகீர் குண்டுகளை வீசியுள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாடு என்பது இடதுசாரிகளின் ஒரு பிரிவு நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனானத்தை எதிர்க்கக் கூடாது; ஒழித்துதான் ஆக வேண்டும்; சனாதனம் என்பது டெங்கு, மலேரியா, காலரா போன்றது; அதனால் ஒழிப்போம் என முழக்கமிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் ஒரு சேர சனாதனத்தை ஒழிப்போம் என எப்படிப் பேசலாம்? சனாதனத்தை பின்பற்றுவோரைக் கூட தாக்குவார்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டுவோம்; நாக்கை அறுப்போம் என கொலை மிரட்டல்கள் ஒரு பக்கம்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூரில் பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா பேசியிருப்பதாவது: சனாதன தர்மத்தைப் பற்றி இன்று பலரும் பேசுகின்றனர். மும்பையில் "இந்தியா" கூட்டணியின் கூட்டம் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ந் தேதி சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இதுவரை வாயே திறக்கவில்லை. நான் இந்த கூட்டத்தின் வாயிலாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும்தான் மும்பையில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் சனாதனத்தை இழிவுபடுத்தும் அஜெண்டாவை உருவாக்கினார்கள். அதை திமுகவிடமும் இதர கட்சிகளிடமும் கொடுத்து சனாதனத்துக்கு எதிராக பேசும்படி தூண்டிவிட்டுள்ளனர். இவ்வாறு ஜேபி நட்டா கூறினார்.
மும்பை சதி மேட்டர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியுமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications