காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு
ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், அவரின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்ற சக உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
நாதவ் லாபிட்டின் கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர், நாதவ் லாபிட்டின் நிலைப்பாடு குறித்து தனது கண்டனத்தை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.
இந்த பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், நடுவர் மன்ற உறுப்பினர்களில் மூவர் நாதவ் லாபிட் நிலைப்பாட்டிற்கும், அவரது கருத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆதரவு
பிரிட்டிஷ் அகாடெமி பிலிம் விருதை வென்ற, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இஸ்ரேல் திரைப்பட தயாரிப்பாளரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்ற சக உறுப்பினருமான ஜின்கோ கோடோ நாதவ் லாபிட்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல இதர நடுவர் மன்ற உறுப்பினர்களான பாஸ்கேல் சாவன்ஸ் மற்றும் ஜேவியர் அங்குலோ பார்டுரன் ஆகியோரும் நாதவ்க்கு ஆதரவளித்துள்ளனர். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நாதவ் நடுவர் மன்ற தலைவராக இருந்தார். அப்போது இந்த விழாவில் திரையிடப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை இழிவான திரைப்படம் என்றும், பிரசார தன்மை வாய்ந்த திரைப்படம் என்றும் கூறியிருந்தார்.

இஸ்ரேல் எதிர்ப்பு
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நடுவர் மன்ற உறுப்பினர்கள் மூவர் தங்களது ஆதரவை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில், "நாதவ் லாபிட் கூற்றுக்கு நாங்கள் உறுதியான ஆதரவளிக்கிறோம். விழா மேடைகள் அரசியலுக்காக பயன்படுத்துவதையும், இதனை விமர்சித்த நாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் நாங்கள் வேதனையோடு பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர். முன்னதாக நாதவின் விமர்சனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அவருக்கு எதிராக இஸ்ரேல் அரசு விமர்சனத்தை முன் வைத்தது. அதாவது, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன், "இது போன்று விமர்சித்ததற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான அறிக்கையை ஆங்கிலத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக வெளியிட்டிருந்தார்.

வீடியோ
அதேபோல இந்த படத்தின் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி, இது போன்ற விமர்சனங்கள் ஒன்றும் தனக்கு புதிதல்ல என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "நகர்ப்புற நக்ஸல்கள், பயங்கரவாத அமைப்புகள் மூலம் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவை பிரிக்கும் நோக்கம் கொண்டவர்கள் இது போன்ற விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் இப்படியான விமர்சனம் முன் வைக்கப்பட்டதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 700 பேரிடம் பேசி தகவல்களை சேகரித்த பின்னர்தான் நாங்கள் இந்த படத்தை இயக்கியுள்ளோம். எனவே இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை தவறு என நிரூபித்தால் இனி படம் இயக்குவதையே விட்டுவிடுகிறேன்" என்று கூறியிருந்தார்.

ஆதரவும் எதிர்ப்பும்
இப்படத்தின் ட்ரைலர் வெளியானதிலிருந்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சியினர் மற்றும் அமைப்பினர் இதனை கொண்டாட தொடங்கினர். மத்திய அரசு இத்திரைப்படத்திற்கு வரிச் சலுகையையும் வழங்கியது. மறுபுறத்தில் இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவது போல் அமைந்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தது. தற்போது இதே போன்ற விமர்சனத்தை இஸ்ரேலிய இயக்குநர் முன்வைத்திருப்பது அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications