வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா?.. நீதிபதி சந்திரசூட் விளாசல்
Recommended Video

டெல்லி: ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டமே மிகப் பெரிய மோசடியாகும். வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா என்ன என்று உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் கடுமையாக கூறியுள்ளார்.
ஆதார் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் தீபக் மிஸ்ரா உள்பட நான்கு நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பையும் அளித்தனர். பெரும்பான்மைத் தீர்ப்பு தற்போது அமலாகவுள்ளது.

நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பை வழங்கியபோது மத்திய அரசை சரமாரியாக விளாசியிருந்தார். அதிலிருந்து சில:
நிதி மசோதாவாக இதை லோக்சபாவில் நிறைவேற்றியதே மிகப் பெரிய சட்ட மோசடியாகும். அரசியல் சாசன மீறலாகும். ராஜ்யசபாவைத் தவிர்த்து விட்டு மத்திய அரசு இதை நிதி மசோதாவாக நிறைவேற்றியது சட்டத்தை மீறிய செயலாகும்.
[ஆதார் ஒரு பிராடு, சட்டவிரோதமானது.. ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி.. சந்திரசூட்!]
செல்போன் என்பது இன்றைய வாழ்க்கையில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதை ஆதாருடன் இணைக்க கூறியது மிகப் பெரிய தனி மனித உரி்மை மீறலாகும். ஒருவரது சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.
அதேபோலத்தான் வங்கிக் கணக்கு தொடங்கவும் ஆதார் எண் கட்டாயம் என்பது. வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா என்ன? பண மோசடி செய்வதற்காகவா ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர்? இது முற்றிலும் சர்வாதிகாரமான நோக்கமாகும்.
தகவல் சுதந்திரம், தனி மனித சுதந்திரம், புள்ளிவிவர சுதந்திரம், சுய மரியாதை என எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கியுள்ளது ஆதார் திட்டம். இங்கு சேகரிக்கப்படும் தகவல்களை தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்று நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications