For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் செய்யப்பட உள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.எஸ்.தாக்கூரின் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, ஜே.எஸ்.கேஹர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Justice Jagdish Singh Khehar to be next Chief Justice Of India

நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வரும் ஆண்டு ஜனவரி 4,2017 அன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அவர் ஜனவரி 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி 2017- வரை அந்த பதவியில் நீடிப்பார்.

ஜே.எஸ்.கேஹர்:

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ல் பிறந்தார் நீதிபதி கேஹர். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் சட்டப்படிப்பை முடித்தார். இவர் பஞ்சாப், சண்டீகர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முதல் சீக்கியர் ஆவார். புதிய உச்சநீதிமன்ற 44 வது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Justice Jagdish Singh Khehar will be sworn in as the next Chief Justice of India on January 4. Justice Khehar will be replacing Chief Justice of India Justice T.S.Thakur, who demits office on January 3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X