தற்கொலை முயற்சிக்குத் தண்டனையா.... விதியை சட்ட புத்தகத்திலிருந்தே தூக்க வேண்டும் – டெல்லி நீதிபதி
டெல்லி: தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவருக்கான தண்டனையை சட்ட புத்தகத்தில் அனுமதிக்க கூடாது என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே அமித்குமார் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பினாயில் குடித்து மயங்கி கிடந்தார். ரோகினி பகுதியை சேர்ந்த அவர் சுல்தான்புரி போலீஸ் நிலைய அதிகாரி தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாகவும் அந்த பயத்தினால் தற்கொலை செய்வதாகவும் தனது கையில் எழுதியிருந்தார்.

அவரை போலீசார் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் உயிர்பிழைத்த அவர் மீது சுல்தான்புரி போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது கூறிய நீதிபதி மனிஷா குரானா கக்கார், "தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒருவரை தண்டிப்பதற்கான விதிகளை சட்டப்புத்தகத்தில் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த விதியை ரத்து செய்வதற்காக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தாலும் இந்த விதி காட்டுமிராண்டித்தனமானதும் மனித சமூகத்துக்கு எதிரானதும் ஆகும்" என்று தெரிவித்தார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதி மாறாக அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் இந்த வழக்கில் தற்போதைய விதிகளின்படி அமித்குமாரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். எனினும் அவருக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309 இன் படி தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications