காளி ஆற்றில் தடுப்பு சுவருக்கு எதிர்ப்பு- 11-வது முறையாக இந்தியர்கள் மீது நேபாளிகள் சரமாரி கல்வீச்சு
டேராடூன்: காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காளி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நேபாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் மீது நேபாளிகள் தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
நேபாள எல்லையில் ஓடும் காளி அல்லது சாரதா ஆற்றின் கரையில் Dharchula நகரம் அமைந்துள்ளது. காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் Dharchula நகரம் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதனையடுத்து Dharchula நகரத்தின் பாதுகாப்புக்காக காளி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பு சுவர் கட்டுவதற்கு நேபாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காளி ஆற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழிலாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, கட்டுமான பணியில் ஈடுபடும் இயந்திரங்களை சேதப்படுத்துவது என நேபாளிகள் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய எல்லைக்குள் ஒரு இந்திய நகரத்தை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடுப்பு சுவர் எழுப்புவதற்கு உரிமை உள்ளது; ஆகையால் தடுப்பு சுவர் கட்டுகிறோம் என்பது Dharchula நகர மக்களின் கருத்து. ஆனால் இது தங்களுக்கு அநீதியை ஏற்படுத்துகிறது என கூறி நேபாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய கல்லெறி சம்பவங்கள் ஏற்கனவே 10 முறை நிகழ்ந்துள்ளன.
இதனையடுத்து இந்தியா-நேபாள அதிகாரிகள் இந்த எல்லை பதற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் நேபாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனா நேபாள அரசாங்கம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், நேபாள எல்லைக்கு சரக்கு வாகனங்களை இந்திய லாரிகள் கொண்டு செல்லாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நேபாளிகள் வன்மத்துடன் இத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications