காவிரி பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும்: கமல்ஹாசன்
காவிரி குறித்து இன்று குமாரசாமியை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.
Recommended Video

பெங்களூரு: காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.

இதற்கான உறுப்பினர்களையும் தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் குமாரசாமியும் கமல்ஹாசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், காவிரி பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும். திரைப்பட விவகாரங்கள் குறித்து நான் குமாரசாமியுடன் பேசவில்லை. சினிமாவை விட காவிரிதான் முக்கியம். குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில் காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றார்.

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இருமாநிலங்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். கர்நாடக விவசாயிகளைப் போல தமிழக விவசாயிகளும் முக்கியமானவர்கள். தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகாவும் தயார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications