நீதி, நியாயம், வென்றுள்ளது... இப்போதான் நிம்மதியா இருக்கு.. ஹேப்பி மோடில் கனிமொழி!
நீதி நியாயம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என 2ஜி தீர்ப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: நீதி நியாயம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என 2ஜி தீர்ப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்பி, ஆ ராசா, ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை திமுகவினர்ல கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்தும் ஆரவார முழக்கமிட்டு திமுகவினர் ஆனந்த கூத்தாடி வருகின்றர்.

கணவருடன் வந்த கனிமொழி
தீர்ப்பை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி தனது கணவர் அரவிந்தனுடன் காலையிலேயே நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார். அவருக்கு ஆதரவாக அழகிரி, திருச்சி சிவா, துரைமுருகன், டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.

14 பேரும் விடுவிப்பு
நாடே எதிர்ப்பார்த்த முக்கிய தீர்ப்பு என்பதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 10.45 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கனிமொழி 2ஜி வழக்கில் நீதி நியாயம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நிம்மதி கிடைத்துள்ளது
2ஜி வழக்கால் பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது என்றும் கனிமொழி கூறினார். மேலும் 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications