40-ம் நாளாக ஓயாத கன்னட இனவாதிகளின் ஓலம்! காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையத்தை கலைக்கோனுமாம்!
மண்டியா: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறக்காதே என 40 நாட்களாக போராடி வரும் கன்னட விவசாயிகள் தற்போது காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய காவிரி நதிநீர் பங்கீட்டு மாநிலங்கள் எப்படி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை விவரித்தது காவிரி நடுவர் மன்றம். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளின் மழை, கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடுவதை காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரையை பரிசீலனை செய்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும்.
தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக திறப்பது இல்லை. காவிரி நதிநீரை நினைத்தால் திடுமென அதிகமாக திறப்பது; இல்லையென்றால் சொற்ப நீரை திறப்பது என்கிற போக்குகளைத்தான் கர்நாடகா அரசுகள் கடைபிடிக்கின்றன. தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் தேவை என்கிற போது ஒழுங்காற்று குழு 5,000, 3,000 கன அடிநீரை பரிந்துரைத்தது. காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை கர்நாடகா மதிக்கவே கூடாது என 40 நாட்களாக மண்டியாவில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள். 40 நாட்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை கன்னட அமைப்பினர் நடத்தி உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வழக்கம் போல சொற்ப நீரை திறப்பதும் பின்னர் நிறுத்துவது, திடீரென அதிகமான நீரை திறப்பது என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது கர்நாடகா.
டெல்லியில் நேற்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்கிறது கர்நாடகா. இதனிடையே 40-வது நாளாக மண்டியா, சாம்ராஜ்நகரில் தொடர் போராட்டங்கள் நேற்றும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் மண்டியா மாவட்ட மருத்துவர்களும் இணைந்தனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு எதுவுமே தேவை இல்லை; அத்தனையையும் கலைக்க வேண்டும் எனவும் கன்னட விவசாயிகள், இனவாதிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications