கூல்ட்ரிங்சில் மயக்க மருந்து கொடுத்து காதலியை பலாத்காரம் செய்த இளம் நடிகர்! பகீர் புகார்
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் தன் காதலியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார். சுப்ரமண்யா என்ற அந்த கன்னட நடிகர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.
போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வளரும் நடிகரான இவர் 'ஹோம்பன்னா' என்ற கன்னட படம் ஒன்றில் நடித்து இருக்கிறார்.
இவர் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வன்புணர்வு செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதேபோல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் பழக்கம்
கன்னட திரைப்பட உலகில் 'ஹோம்பன்னா' என்ற படத்தில் நடித்தார் சுப்ரமண்யா என்பவர். இவருக்கு பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின் இது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிந்ததை அடுத்து திருமணம் குறித்த பேச்சுக்கள் எழுந்து இருக்கிறது.

மறுப்பு
ஆனால் திருமணம் செய்ய சுப்ரமண்யா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல்படமான 'ஹோம்பன்னா' வெளிவந்த பின்பே திருமணம் பற்றி பேசமுடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் படம் வெளி வந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்துள்ளார். வீடு கட்டிய பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

பாலியல் வன்புணர்வு
கடந்த நவம்பர் 1ம் தேதி சுப்ரமண்யா அந்த பெண்ணை தன் சகோதரி வீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார். ஆனால் விழாவிற்கு அழைத்து செல்லாமல் தன்னுடைய வாடகை வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு இந்த விஷயம் மயக்கம் தெளிந்த பின்பே தெரிந்துள்ளது.

ஆசிட் வீசுவேன்
இதன் பின்பும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சுப்ரமண்யா மறுத்துள்ளார். மேலும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் ஆசிட் அடித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். அதேபோல் ''அடுத்த படத்திற்கு 20 லட்சம் பணம் வேண்டும். அந்த பணத்தை கொடுக்கும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன். நீ ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்'' என்று கூறியுள்ளார்.

தப்பி ஓட்டம்
தற்போது சுப்ரமண்யா குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்த உடன் அவர் தலைமறைவாகி இருக்கிறார். தற்போது போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருகிறது. அவர் மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி என நிறைய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications