பலாத்காரத்துக்கு எதிராக பெங்களூர் பந்த்: கன்னட அமைப்புகள் அறிவிப்பு
பெங்களூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெங்களூரில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் வியாழக்கிழமை ஒரு நாள் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
பெங்களூரில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, கல்லூரி மாணவி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டது என சமீபகாலமாக பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனை கண்டிக்கும் வகையில் வரும் வியாழக்கிழமை ஒரு நாள், 'பெங்களூர் பந்த்' நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில் "பெங்களூர் நகரை, பலாத்காரங்களின் நகரமாக மாற விடமாட்டோம். வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறும்.
இந்த போராட்டத்துக்கு பெங்களூர் நகர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்றையதினம், முதல்வர் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று பலாத்காரங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்படும். பந்த் தினத்தன்று அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும்" என்றார்.
இதனிடையே, பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. பஸ், ஆட்டோக்கள், போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications