தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடாதே! காவிரி ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம்!
மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் இருந்து இந்த நீர் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கடந்த 5 நாட்களாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாண்டியாவில் நேற்றும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மலவள்ளி, பாண்டவபுரா ஆகிய இடங்களிலும் போராட்டம் நடந்தது. கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடவும் விவசாயிகள் முயற்சித்தனர். அப்போது காவிரி ஆற்றில் இறங்கி நின்று தமிழ்நாட்டுக்கு எதிராக முழக்கங்களை கன்னட விவசாயிகள் எழுப்பினர். இதனால் மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
காவிரி வழக்கு: இதனிடையே தமிழ்நாடு அரசு காவிரி நீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு வெறும் 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு போதுமானது இல்லை. ஆகையால் தமிழ்நாட்டிக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications