Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த சிக்மகளூர் தொகுதியில் பேத்தி பிரியங்கா பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சிக்மகளூர்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் அவரது பேத்தியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார்.

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தின் போது, மாநிலங்களுக்கான நிதியை மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு உங்களை சூறையாடிவிட்டது. இங்கே நடப்பது 40% கமிஷன் பெறுகிற அரசாங்கம்தான். பாஜக அரசானது கொரோனா நிதியை செலவிடவில்லை. பள்ளி குழந்தைகளுக்கான மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்தவில்லை. மாநில அரசு பணிகள் காலியாக இருக்கின்றன. இந்த நிதியும் வேலைவாய்ப்பும் உங்களுடையது என்பதை மறந்துவிடாதீர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஏழைகளுக்கான 10 கிலோ இலவச அரிசியை காங்கிரஸ் ஆட்சி வழங்கும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ3,000 நிதி உதவி வழங்குவோம். பெண்களுக்கு மாதம் ரூ2,000 உதவித் தொகை வழங்குவோம் என்றார்.

Karnataka Assembly Election 2023: Priyanka Gandhi to campaign Chikamagaluru today

இதனைத் தொடர்ந்து இன்று சிக்மகளூர் தொகுதியில் பிரியங்கா காந்தி முகாமிட்டு பிரசாரம் செய்கிறார். நேரு குடும்பத்துக்கு மிக முக்கியமான இடம் சிக்மகளூர். நாட்டில் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்து பின் ரத்து செய்த போது 1977 லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நேரு குடும்பத்தின் கோட்டையான உ.பி. ரேபரேலியில் ராஜ் நாராயணனிடம் தோற்றுப் போனார் இந்திரா காந்தி. இதனால் இந்திராவின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாட்னு. அப்போது காங்கிரஸ் கட்சியும் பல பிரிவுகளாக சிதறுண்டு கிடந்தன.

1978-ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், கர்நாடகாவின் சிக்மகளூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. முதலில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை நிறுத்தலாம் என முடிவு செய்திருந்தார் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர். ஆனால் அன்றைய டெல்லி மிரட்டியதால் எம்ஜிஆர் பின்வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டார். இத்தேர்தலில் இந்திரா அமோக வெற்றி பெற்றார். இதனால் இந்திய அரசியலில் இந்திரா காந்தி மறுவாழ்வு பெற்றார். 1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று மீண்டும் அரியணை ஏறினார் இந்திரா அம்மையார். இத்தகைய நேரு குடும்பத்துக்கு மிக முக்கியமான சிக்மகளூர் தொகுதியில் பிரியங்கா இன்று பிரசாரம் செய்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+