ஆந்திராவில் ரயில் விபத்து: கர்நாடகா காங். எம்.எல்.ஏ. உட்பட 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்
அனந்த்பூர்: ஆந்திராவில் பெங்களூருவில் இருந்து நான்டட் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் கர்நாடகா காங். எம்.எல்.ஏ. வெங்கடேஷ் நாயக் உட்பட 6 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள நான்டட் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டம் பெனுகொண்டா பகுதியில் மடகசிரா என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்ற போது லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கிரானைட் ஏற்றி சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
Bangalore-Nanded Express train accident: More visuals from the spot pic.twitter.com/C5pR2PYSsf
— ANI (@ANI_news) August 24, 2015 இதில் ரயிலின் ஹெச்-1 உட்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. ஹெச்-1 பெட்டியில் இருந்த கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடேஷ் நாயக் உட்பட 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிரானைட் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தார். மேலும் 20 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பலியான வெங்கடேஷ் நாயக் கர்நாடகாவின் தேவதுர்க் தொகுதியின் எம்,எல்.ஏ..
இந்த ரயில் விபத்தால் கர்நாடகாவின் பெங்களூரு- ஆந்திராவின் குண்டக்கல் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மீட்புப் பணிகளும் ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
23 பேரை பலிகொண்ட இடம்..
கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து நான்டட் நோக்கி சென்ற இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இதே ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில்தான் கொத்தசேவூர் என்ற இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications