கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!
கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!
Recommended Video
பெங்களூரு: இந்தியாவிலேயே கொரோனா வைரஸுக்கு முதலில் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் கொரோனா தாக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹூசைன் சித்திக். செளதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கடந்த மாதம் இந்தியாவுக்கு சித்திக் திரும்பியிருந்தார்.
சித்திக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சித்திக்குக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கு பலியானர் சித்திக் என்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சித்திக்கின் உறவினர்கள் 4 பேருக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது உயிரிழந்த சித்திக்குக்கு சிகிச்சை அளித்த 63 வயது மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications