தொடரும் சஸ்பென்ஸ்.. பார்டர் லைனில் பாஜக.. கர்நாடகாவில் காங்.-மஜத கூட்டணி அரசுக்கு வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக முடிவை சரியாக கணித்த அரசியல் அறிவு!

  பெங்களூர்: கர்நாடகாவில், பாஜக வெற்றி பெற்றுவிட்டதாக இப்போதே கூறிவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  மதியம் 1 மணி நிலவரப்படி, பாஜக 109 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளிலும், மஜத 40 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

  222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் என்பதால் தனிப்பெரும்பான்மைக்கு 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

   தனிப்பெரும்பான்மை இல்லை

  தனிப்பெரும்பான்மை இல்லை

  இன்னும் சுமார் 8 ரவுண்டு வாக்கு எண்ணிக்கை பாக்கியுள்ள நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்துவிட்டதாக கூறிவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

   கூட்டணி

  கூட்டணி

  சில தொகுதிகளில், எந்த பக்கம் வேண்டுமானாலும், நிலைமை மாற வாய்ப்பிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் அரசியல் பார்வையாளர்கள், இழுபறி நிலை அதாவது தொங்கு சட்டசபை நிலை ஏற்பட்டால் அப்போது பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக, மஜத மற்றும் காங்கிரஸ் கை கோர்த்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

   சித்தராமையா ஆலோசனை

  சித்தராமையா ஆலோசனை

  நிலவரம் குறித்து முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத்தும் மஜத தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார்.

   சஸ்பென்ஸ் நீடிக்கிறது

  சஸ்பென்ஸ் நீடிக்கிறது

  தொங்கு சட்டசபை அமைந்தால், எப்படியாவது காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசை அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தரப்பு மிகவும் மும்முரமாக உள்ளதாம். எனவே, கர்நாடக அரசியலில், சஸ்பெண்ஸ் இன்னும் ஓயவில்லை என்பதே கள நிலவரம் சொல்லும் தகவல்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP need 112 for majority. they are at 108 now. As only 6 to 7 rounds over and 6 to 8 rounds to go further, numbers are switching all the sides, as rounds progress.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற