அரசு ஆபீசில் பெண்ணிடம் உறவு வைத்த கர்நாடக அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ வெளியானதும் ராஜினாமா
பெங்களூர்: பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த பெண்ணிடம் அவர் உடலுறவு கொள்ளும் காட்சி கன்னட செய்தி டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டி மீதான குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ காட்சி அடங்கிய சிடி தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ராஜசேகர் கூறியிருந்த நிலையில், இன்று கன்னட டிவி சேனல் ஒன்றில் மேட்டி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் காட்சி வெளியானது.

இந்த வீடியோ வெளியானபோது, மேட்டியின் சொந்த மாவட்டமான பாகல்கோட்டையில், மின்சார இணைப்பை அரசு துண்டித்தது. இந்நிலையில், பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த மேட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார்.

பாகல்கோட் நகரிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் வைத்து விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் மேட்டி உறவு கொண்டதாக கூறப்படுகிறது. அந்த அலுவலகத்தை வீடியோ படமெடுக்க சென்ற சம்மந்தப்பட்ட டிவி சேனல் நிருபரை தாக்க அமைச்சர் ஆதரவாளர்கள் முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது. ஆனால் போலீசார் தக்க நேரத்தில் தலையிட்டு அமைச்சரின் அடியாட்களை விரட்டிவிட்டனர்.












Click it and Unblock the Notifications